இந்தியா
ஜி.எஸ்.டி.

தொடர்ந்து 6-வது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜி.எஸ்.டி. வரி வசூல்

Published On 2022-01-01 14:37 GMT   |   Update On 2022-01-01 14:37 GMT
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரி மாத மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: 

நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6-வது மாதமாக டிசம்பரிலும் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் மாத வசூலை விட 13 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது:- 

டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 780 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரி ரூ.22 ஆயிரத்து 578 கோடி, மாநில ஜி.எஸ்.டி. வரி ரூ.28 ஆயிரத்து 658 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரூ.69 ஆயிரத்து 155 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.614 கோடி உட்பட செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 389 கோடி கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரி மாத மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News