இந்தியா
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஞ்சு சேவாக்

வீரேந்தர் சேவாக்கின் சகோதரி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்

Published On 2021-12-31 13:11 GMT   |   Update On 2021-12-31 13:11 GMT
முதல்வர் கெஜ்ரிவால் செய்த மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் சகோதரியும், முன்னாள் கவுன்சிலருமான அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 

ஆசிரியையான அஞ்சு சேவாக், 2012ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த தகவலை, அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் செய்த மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருப்பதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News