இந்தியா
பெட்ரோல் பங்க்

இந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு: ஆனால்...

Published On 2021-12-29 10:48 GMT   |   Update On 2021-12-29 12:25 GMT
மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் வரியை குறைத்தன.
ராஞ்சி:

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த மாதம் மத்திய அரசு கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் மீதான வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதேபோல் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.



‘பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மீது லிட்டருக்கு 25 ரூபாய் நிவாரணமாக அரசாங்கம் வழங்கும்.  ஜனவரி 26ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும்’ என முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
Tags:    

Similar News