புது டெல்லி:
காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் நடைபெறுகிறது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137வது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, கொடி கம்பத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்றி வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கொடி கீழே அவரது கைகளில் வந்து விழுந்தது.
#WATCH | Congress flag falls off while being hoisted by party's interim president Sonia Gandhi on the party's 137th Foundation Day#Delhipic.twitter.com/A03JkKS5aC— ANI (@ANI) December 28, 2021
உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கிருந்த தொண்டர்கள் அந்த கொடியை எடுத்து சரி செய்து கொண்டு சென்றனர்.
பின்னர் வழக்கம் போல் நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் சோனியகாந்தி கலந்து கொண்டார். கட்சி கொடி கீழே விழுந்ததால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.