இந்தியா
தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா

சிறுவர்களுக்கான தடுப்பூசி புத்தாண்டு பரிசு - தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் கருத்து

Published On 2021-12-27 02:33 GMT   |   Update On 2021-12-27 02:33 GMT
கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.  இதன் ஒரு பகுதியாக  15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் அறிவித்தார்.

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஜனவரி 3-ந்தேதி தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை சைதாப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது, சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா  தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தாலும், பல பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் இன்னும் நம்பிக்கையுடன் இல்லை. எனவே இந்த தடுப்பூசி இயக்கம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். இளம் பருவத்தினருக்கு ஒரு சிறந்த புத்தாண்டு பரிசு என்று நான் கூறுவேன். இவ்வாறு டாக்டர் அரோரா குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News