இந்தியா
கோப்புப்படம்

ஆன்லைன் வகுப்பின்போது செல்போன் வெடித்து சிறுவன் காயம்

Published On 2021-12-17 09:42 GMT   |   Update On 2021-12-17 09:42 GMT
மத்தியப் பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து ஏற்பட்ட விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாத்னா:

மத்தியப் பிரதேசம் சத்னா மாவட்டத்தின் தலைமையகத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது சந்த்குய்யா கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ராம்பிரகாஷ் பதவுரியா 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராம்பிரகாஷ்க்கு நேற்று வழக்கம்போல் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. அப்போது வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது. இந்நிலையில், ராம்பிரகாஷ் செல்போனில் ஆன்லைன் வகுப்பை கவனித்துக் கொண்டு இருந்தபோது திடீரென செல்போன் வெடித்துள்ளது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ராம்பிரகாஷை மீட்டு மாவட்ட  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து ஜபால்பூர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், செல்போன் வெடித்ததில் மாணவரின் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர்
Tags:    

Similar News