இந்தியா
புதுச்சேரி அரசு தலைமை செயலகம்

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு

Published On 2021-12-15 14:49 GMT   |   Update On 2021-12-15 14:49 GMT
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என புதுச்சேரி அரசு குறிப்பிட்டுள்ளது.
புதுச்சேரி:

கொரோனா பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளன.  எனினும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 



அதே போல்  புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் ஜனவரி ஒன்றாம் தேதி அதிகாலை 2 மணி வரை மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட்டங்களை முன்னிட்டு காவல்துறையிடம் அனுமதி பெற்று கூடுதல் நேரம் மதுக்கடைகளை திறக்கலாம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என புதுச்சேரி அரசு குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News