இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும்: வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் டுவீட்

Published On 2021-12-15 06:09 GMT   |   Update On 2021-12-15 09:15 GMT
சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
புது தில்லி:

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 71வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பட்டேல் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் சமஸ்தானங்களை இணைப்பதற்காக பெரும் முயற்சிகளை எடுத்தவர்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு டுவிட்டர் மூலம் அஞ்சலி செலுத்தினார்.
 
இதுகுறித்து பிரதமர் மோடி குறிப்பிடுகையில், "சர்தார் வல்லபாய் பட்டேலை அவரது புண்ணிய திதி நாளில் நினைவுக்கூர்கிறேன். அவரது மகத்தான சேவை, நிர்வாக திறன்கள் மற்றும் நமது தேசத்தை ஒன்றிணைப்பதற்காக அயராத முயற்சிகளுக்காக இந்தியா அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.. முப்படைத்தளபதி உள்பட 13 பேர் பலி- ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 80 பேரிடம் ராணுவம் விசாரணை
Tags:    

Similar News