இந்தியா
பள்ளிக்கு வந்த மாணவர்கள்

ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு இடையில் மும்பையில் பள்ளிகள் திறக்கப்பட்டது

Published On 2021-12-15 03:11 GMT   |   Update On 2021-12-15 03:11 GMT
மும்பையில் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
மும்பை:

மகாராஷ்டிரத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நகர் பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஊரகப்பகுதிகளில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி முதல் நகர்பகுதிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலும், ஊரகப்பகுதிகளில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த போதும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மும்பை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடக்க பள்ளிகள் திறக்கப்படவில்லை.

மாநில அரசு கடந்த மாதம் 29-ந் தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து, மும்பையில் இன்று முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.



இந்தநிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு இடையில் இன்று மும்பையில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

மும்பையில் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இன்று தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News