இந்தியா
ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க நடவடிக்கை - மத்திய அரசு தகவல்

Published On 2021-12-13 20:07 GMT   |   Update On 2021-12-13 20:07 GMT
உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது என மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், ‘உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. இது மிக மிக முக்கியமான விலை ஆகும். ஏனெனில் இது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கும் மலிவு விலையில் உள்ளது’ என்று கூறினர்.



ஸ்மார்ட்போன்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், கடைசி மைல்வரை ஸ்மார்ட்போன் சென்றடையும் வகையில் வினியோக சங்கிலி செலவுகளை குறைத்தல் மற்றும் இந்தியாவின் வடிவமைப்பு திறன்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்ைககள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Tags:    

Similar News