இந்தியா
மம்தா பானர்ஜி

ஓட்டுகளைப் பிரிக்க வரவில்லை... ஒன்றிணைத்து வெற்றி பெற வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்திய மம்தா

Published On 2021-12-13 13:20 GMT   |   Update On 2021-12-13 13:20 GMT
கோவாவில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி, கட்சியினரிடையே பேசுகையில், நம்பிக்கையுடன் இருந்தால், ஒரு அடிகூட பின்வாங்க கூடாது என அறிவுறுத்தினார்.
பனாஜி:

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவாவில் இந்த முறை ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. 

இந்நிலையில் தேர்தல் பணிகள் மேற்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பனாஜியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்ற மம்தா, தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அவர் பேசியதாவது:-

TMC (திரிணாமுல் காங்கிரஸ் கட்சி) என்பது டெம்பிள்-மாஸ்க்-சர்ச். நாம் பாஜகவை எதிர்த்து போராடுகிறோம். வெற்றி வாய்ப்பு உள்ளதா? நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், ஒரு அடிகூட பின்வாங்க கூடாது.

ஓட்டுகளைப் பிரிப்பதற்காக நாம் இங்கு வரவில்லை, மாறாக வாக்குகளை ஒன்றிணைத்து திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவே வந்திருக்கிறோம். நமது அணிதான் பாஜகவின் மாற்று. யாராவது இந்த கூட்டணியை ஆதரிக்க விரும்பினால், அவர்களே முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துள்ளோம். தேர்தல் போரில் சண்டையிட்டு வீழ்ந்தாலும் வீழ்வோமே தவிர, பின்வாங்க மாட்டோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

Similar News