இந்தியா
பிபின் ராவத்

பிபின் ராவத் போன்றோரால் தேசியக் கொடி உயரப்பறக்கும் - ஜனாதிபதி பேச்சு

Update: 2021-12-11 18:13 GMT
குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிக்கு உதவியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
டேராடூன்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுட அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். 

அப்போது பேசிய ராம்நாத் கோவிந்த், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மரியாதை எப்பொழுதும் பேணி பாதுகாக்கும் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப் பறக்கும் என்றார்.    
Tags:    

Similar News