இந்தியா
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியின் நேபாள பயணம் ரத்து

Published On 2021-12-11 02:47 GMT   |   Update On 2021-12-11 02:47 GMT
மம்தா பானர்ஜியின் அலுவலகத்தில் இருந்து மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை.
கொல்கத்தா :

இன்று நடைபெறும் நேபாள காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று பேச வருமாறு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

அதையடுத்து, மம்தா பானர்ஜியின் அலுவலகத்தில் இருந்து மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை.

அதன் காரணமாக, மம்தா நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு செல்லவிருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

மம்தா பானர்ஜி இதற்கு முன்பும் சீனா, இத்தாலி செல்ல மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News