இந்தியா
பிரியங்கா காந்தியை வரவேற்ற நிர்வாகிகள்

பிரியங்கா வந்த சமயத்தில் கட்சியை விட்டு விலகிய முக்கிய தலைவர்கள் -கலக்கத்தில் கோவா காங்கிரஸ்

Published On 2021-12-10 12:53 GMT   |   Update On 2021-12-10 12:53 GMT
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் கோவா காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், அதிருப்தி காரணமாக முக்கிய நிர்வாகிகள் விலகியதால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பனாஜி:

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று கோவாவில் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக டெல்லியில் இருந்து இன்று பனாஜி வந்து சேர்ந்துள்ள நிலையில், கட்சியின் முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் கோவா காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், அதிருப்தி காரணமாக முக்கிய நிர்வாகிகள் விலகியதால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 



போர்வோரிம் தொகுதியில் இருந்து முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் குபேஷ் நாயக் தலைமையில் ஒரு குழுவினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதுபற்றி குபேஷ் நாயக் கூறுகையில், கோவா சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை, சில தலைவர்களின் அணுகுமுறை சரியில்லை, என்றார்.

இதேபோல் தெற்கு கோவாவின் மூத்த தலைவரான மோரினோ ரெபலாவும் கட்சியை விட்டு இன்று விலகினார். கர்டோரிம் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ அலெக்ஸியோ ரெஜினால்டோ லோரன்கோவுக்கு மீண்டும் சீட் கொடுத்தற்கு ஆட்சேபனை தெரிவித்து கட்சியை விட்டு விலகியிருக்கிறார் ரெபலா. 
Tags:    

Similar News