இந்தியா
மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி குணமடைந்தார்

மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி குணமடைந்தார்

Published On 2021-12-09 05:28 GMT   |   Update On 2021-12-09 06:41 GMT
தானே மாவட்டம் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி பகுதியை சேர்ந்த 33 வயதான என்ஜினீயர் அந்த மாநிலத்தில் ஒமைக்ரானுக்கு முதல் நபராக பாதிக்கப்பட்டார்.

தானே:

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 35-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 23 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10 பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. ராஜஸ்தான்-9, கர்நாடகம்-2, குஜராத்-1, டெல்லி-1 ஆகிய மாநிலங்களிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி குணமடைந்துள்ளார்.

தானே மாவட்டம் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி பகுதியை சேர்ந்த 33 வயதான என்ஜினீயர் அந்த மாநிலத்தில் ஒமைக்ரானுக்கு முதல் நபராக பாதிக்கப்பட்டார். கடந்த மாதம் 24-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக டெல்லி வந்தார். அங்கிருந்து மும்பை வந்தார்.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்யாண் பகுதியில் உள்ள கோவிட் தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் அந்த வைரசில் இருந்து குணமடைந்தார்.


ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர் நேற்று மாலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்தது. தற்போது அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் கப்பல் ஒன்றில் பணியில் சேர்ந்தார். கடற்பகுதியில் இருந்த அவர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்...காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Tags:    

Similar News