இந்தியா
இந்திய பணம்

வங்கிகளுக்கு வரும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்தது

Published On 2021-12-08 03:01 GMT   |   Update On 2021-12-08 03:01 GMT
2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகும்.
புதுடெல்லி:

வங்கி அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதேநேரம், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்படி, கடந்த 2017-ம் ஆண்டில் ரூ.17.95 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அது கடந்த ஆண்டு ரூ.92.17 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகும்.

ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையின்படி, கடந்த 2016-17-ம் ஆண்டில் வங்கி அமைப்பில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 72 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது தொடர்ந்து சீராக குறைந்து, 2020-21-ம் ஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 ஆகியிருக்கிறது.

மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.

Tags:    

Similar News