இந்தியா
விமான சேவை

இந்திய விமான நிறுவனங்களுக்கு 2020-21ம் ஆண்டில் இத்தனை கோடி ரூபாய் இழப்பா?

Published On 2021-12-07 17:58 GMT   |   Update On 2021-12-07 17:58 GMT
கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்திய ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய விமான நிறுவனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:

2020-21ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு முறையே ரூ.19,564 கோடி மற்றும் ரூ.5,116 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில விமான நிறுவனங்கள் தங்கள் நிலுவைத் தொகையை வழங்க தவறிவிட்டன. இந்திய விமான நிலைய ஆணையம் அதன் கடன் கொள்கையின்படி நிலுவைத் தொகையை திரும்பப் பெறுவதற்காக விமான நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News