இந்தியா
மெஹபூபா முப்தி

ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை: மெஹபூபா முப்தி

Published On 2021-12-07 15:52 GMT   |   Update On 2021-12-07 15:52 GMT
தேர்தலுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பெண்கள் பத்திரிகையாளர் நிறுவனத்திற்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு- காஷ்மீரில் தற்போது அடக்குமுறை அதிகம் என்றும், மக்கள் மூச்சுவிட முடியாத சூழல் உள்ளதாகவும் கூறினார்.

ஜம்மு- காஷ்மீரின் தற்போதைய கள நிலைமை உலகிற்கு மத்திய அரசு சொல்வதைப் போன்று இல்லை, ஜம்மு- காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தாதவரை தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றார்.

ஜம்மு- காஷ்மீரில் தேர்தலை நடத்துவதற்கு முன்பு மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இங்கு அதிகமான தற்கொலைகள் நடைபெறுகின்றன. மனஅழுத்த சூழல் நிலவுகிறது என்றும் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.

சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு பிறகு மக்களிடம் அச்சம் நிலவுகிறது. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். நிலைமை சீரடைய மற்றொரு முக்கிய விஷயம் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மெஹபூபா முப்தி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News