இந்தியா
நவாப் மாலிக்

பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய கூட்டணி: தேசியவாத காங்கிரஸ்

Published On 2021-12-07 15:37 GMT   |   Update On 2021-12-07 15:37 GMT
பா.ஜனதா 2024-ல் தோற்கடிக்க மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோம் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் இரண்டு முறை அடுத்தடுத்து வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டு முறை மோடி பிரதமராக பதவி ஏற்று மிக வலிமையோடு திகழ்கிறார். அவரை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளால் மோடியை எதிர்க்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி பா.ஜனதாவிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜனதாவை எதிர்க்க முடிவு செய்துள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த வாரத்தில் மகாராஷ்டிரா சென்றிருந்த மம்தா பானர்ஜி சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நவாப் மாலிக், 2024-ல் பா.ஜனதாவை எதிர்க்க மிகப்பெரிய எதிர்க்கட்சிகள் கூட்டணை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவாப் மாலிக் கூறுகையில் ‘‘காங்கிரஸ் உள்பட பா.ஜனதா அல்லாத கட்சிகளை  ஒன்றிணைக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். 2024-ல் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். கூட்டணி அமைக்கப்பட்டால், 2024-ல் மாற்றம் ஏற்படும்.

மதசார்பற்ற கூட்டணி எல்லா கட்சிகளையும் உள்ளடக்கியதாக இல்லை. மதசார்பற்ற கூட்டணியில் இல்லாத கட்சிகள், மதசார்பற்ற கூட்டணியைவிட அதிக எம்.பி.க்களை வைத்துள்ளன. அவர்கள் ஒன்றிணைய வில்லை என்றால், மிகப்பெரிய மாற்று கூட்டணி என்பது கடினம்’’ என்றார்.
Tags:    

Similar News