இந்தியா
ராகுல் காந்தி

அம்பேத்கரின் கனவை நாங்கள் விரைவில் அடைவோம்: ராகுல் காந்தி

Published On 2021-12-06 06:44 GMT   |   Update On 2021-12-06 06:44 GMT
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், " இன்று பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம். நாட்டில் அதிகரித்து வரும் அநீதி, வன்முறை மற்றும் பாகுபாடுகளைப் பார்க்கும்போது இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாக நினைக்கிறேன். பாபா சாகேப்பின் கனவு இன்னும் வெகுதொலைவில் உள்ளது.

ஆனால், அதனை நாங்கள் விரைவில் அடைவோம். அவருக்கு எனது பணிவான அஞ்சலி" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: பாராளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்கிறார்
Tags:    

Similar News