இந்தியா
சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் - மன்சுக் மாண்டவியா பெருமிதம்

Published On 2021-12-05 23:17 GMT   |   Update On 2021-12-05 23:17 GMT
தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா பரவலை அடுத்து, இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையே, மக்களவையில் பேசிய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துகள் இந்தியா, தகுதியான மக்களில் 50 சதவீதத்துக்கும் கூடுதலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது மிகவும் பெருமைக்குரிய தருணம்.  கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News