இந்தியா
ராகுல் காந்தி

நாகாலாந்து விவகாரம்: மத்திய அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

Published On 2021-12-05 09:53 GMT   |   Update On 2021-12-05 09:53 GMT
நாகாலாந்தில் பொது மக்கள் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
புதுடெல்லி:

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து பொது மக்கள் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இதயத்தை உலுக்குகிறது. தங்களது சொந்த மண்ணில் பொது மக்களுக்கோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களுக்கோ பாதுகாப்பு இல்லாதபோது உள்துறை அமைச்சகம் சரியாக என்ன பணி செய்துக் கொண்டிருக்கிறது? இதற்கு மத்திய அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. எல்லைகளை பாதுகாக்க உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம்: அமித் ஷா
Tags:    

Similar News