இந்தியா
ஜனாதிபதியிடம் இருந்து விருது பெறும் அமைச்சர் கீதா ஜீவன்

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை- தமிழகத்திற்கு விருது வழங்கினார் ஜனாதிபதி

Update: 2021-12-03 16:14 GMT
மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி: 

மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெற சிறப்பாகப் பணியாற்றிய  தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் மாநில/மாவட்ட நிர்வாகங்கள் போன்றவற்றிற்கு  மத்திய அரசின் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில்  2020ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறை சார்பில்  டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற‘சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின’ சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். விருதினை தமிழக அரசு சார்பில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பெற்றுக்கொண்டார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 6 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.  மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் மற்றும் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News