இந்தியா
தடுப்பூசி

12-17 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி- அறிவியல் சான்றுகளை பரிசீலனை செய்கிறது அரசு

Published On 2021-12-03 13:03 GMT   |   Update On 2021-12-03 13:03 GMT
மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடிப்பது மற்றும் தேவையான தரவுகளை வழங்குவதைப் பொருத்து தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்பாக மக்களவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான அறிவியல்பூர்வ சான்றுகளை, கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவும், நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் பரிசீலித்து வருகின்றன.

மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு செலுத்துவதற்கான கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது தொடர்பான எந்த திட்டமும் தற்போது அரசிடம் இல்லை. 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ளன. மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடிப்பது மற்றும் தேவையான தரவுகளை வழங்குவதைப் பொருத்து தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய பதிவாளர் ஜெனரல் தகவலின்படி, நாட்டில் 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 14,52,14,000 பேர் உள்ளனர்.
Tags:    

Similar News