இந்தியா
ஆனந்த் சர்மா

பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே பரவலான புரிந்துணர்வு அவசியம் - காங்கிரஸ்

Published On 2021-12-02 22:37 GMT   |   Update On 2021-12-02 22:37 GMT
காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல என அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியே தற்போது இல்லை என அதிரடியாக தெரிவித்தார். மம்தா பானர்ஜியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.கவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் தேவை என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், பா.ஜ.கவை தோற்கடிக்க மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே பரவலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். அது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இதற்கான தேசிய கூட்டு முயற்சியின் மைய தூணாக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News