இந்தியா
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே

அறுவை சிகிச்சை முடிந்தது: 22 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார் உத்தவ் தாக்கரே

Published On 2021-12-02 10:11 GMT   |   Update On 2021-12-02 10:11 GMT
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இன்னும் சில வாரங்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை இருப்பதால் வீட்டில் இருந்தபடி பணிகளை தொடர மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதுகுத்தண்டு பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 10-ம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு 12-ம் தேதி அன்று அவருக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த உத்தவ் தாக்கரே 22 நாட்களுக்குப் பிறகு இன்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே நலமாக இருப்பதாகவும், அவர் ஓய்வு எடுத்துக் கொண்டே வீட்டில் இருந்தபடி பணிகளை தொடரலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், உத்தவ் தாக்கரேவுக்கு இன்னும் சில வாரங்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை இருப்பதால் அதுவரை நேரடி பணிக்கு செல்ல முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. காற்று மாசு பாதிப்பு- டெல்லியில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படும் என அறிவிப்பு
Tags:    

Similar News