இந்தியா
பிரதமர் மோடி

61வது பிறந்தநாள்- ஜே.பி.நட்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-12-02 06:21 GMT   |   Update On 2021-12-02 06:21 GMT
கட்சிக்காக கடுமையாக உழைத்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஜே.பி.நட்டா நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பா.ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இன்று 61-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘கட்சிக்காக கடுமையாக உழைத்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஜே.பி.நட்டா நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News