இந்தியா
கொரோனா தடுப்பூசி

பெங்களூருவில் கொரோனா தடுப்பூசி போட குவியும் மக்கள்

Published On 2021-12-02 03:29 GMT   |   Update On 2021-12-02 03:29 GMT
பெங்களூருவில் ஒமிக்ரான் வைரஸ் பீதி எதிரொலியாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். ஒரேநாளில் 67 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
பெங்களூரு :

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெங்களூருவில் ஒமிக்ரான் வைரஸ் பீதியும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததுடன், அது எந்த வகையான வைரஸ் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பெங்களூரு நகரவாசிகள் இடையே ஒமிக்ரான் வைரஸ் பற்றிய பீதி அதிகரித்து உள்ளது. இதனால் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த 23-ந் தேதியில் இருந்து 29-ந் தேதி வரை 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் பேர் தினமும் கொரோனா தடுப்பூசி போட்டு வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் (கடந்த 30-ந் தேதி) ஒரேநாளில் பெங்களூருவில் மட்டும் 67 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. நகரில் உள்ள தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. நேற்றும் நகரில் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்களுக்கு வந்து மக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு சென்றார்கள்.
Tags:    

Similar News