இந்தியா
விவசாயிகள் போராட்டம்

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? -மத்திய அரசு பதில்

Published On 2021-12-01 15:08 GMT   |   Update On 2021-12-01 15:08 GMT
மத்திய அரசின் பதில் விவசாயிகளை அவமதிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதனை வலியுறுத்தி வருகின்றன.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுமா? என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ‘இந்த விவகாரத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் எந்த பதிவும் இல்லை, எனவே நிதி உதவி வழங்குவது தொடர்பான கேள்வி எழவில்லை’ என  கூறி உள்ளது.

மத்திய அரசின் இந்த பதில் விவசாய சங்கங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய அரசின் பதிலை காங்கிரஸ் கட்சியும் விமர்சித்துள்ளது. மத்திய அரசின் பதில் விவசாயிகளை அவமதிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News