இந்தியா
ராகுல் காந்தி

அநீதி இழைக்கும் ரெயில்வே நிர்வாகம் -ராகுல் குற்றச்சாட்டு

Published On 2021-12-01 12:00 GMT   |   Update On 2021-12-01 13:31 GMT
ஒரு காலத்தில் ரெயில்வேத் துறையில் வேலை பார்ப்பது கவுரவமாக கருதப்பட்டதாகவும், இப்போது அங்கு வேலையே இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வேலையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு ரெயில்வேத் துறை அநீதி இழைப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அநீதியை தடுத்த நிறுத்த வேண்டும் என்று கோருவோருக்கு தமது ஆதரவு தொடரும் என்றும் தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் ரெயில்வேத் துறையில் வேலை பார்ப்பது கவுரவமாக கருதப்பட்டதாகவும், இன்றோ அங்கு வேலையே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரெயில்வேத் துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படித்து விட்டு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு நீதி வேண்டும், அவர்களுக்கு அநீதி இழைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News