இந்தியா
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

போராட்டத்தின்போது விவசாயிகள் உயிரிழப்பா?- எந்த தரவும் இல்லை என்கிறார் மத்திய அமைச்சர்

Published On 2021-12-01 06:33 GMT   |   Update On 2021-12-01 08:52 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கம் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஓராண்டாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.



இதற்கிடையே, கடந்த ஆண்டு முதல் போராட்டத்தின்போது சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக போராட்டத்தை முன்னெடுத்த விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் கூட்டத் தொடரில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

மக்களவை கூட்டத்தொடரில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "போராட்டத்தின்போது, விவசாயிகள் மீதான வழக்குகள் அல்லது உயிரிழந்தவர்களின் விவரம் தொடர்பான தரவு அரசிடம் இல்லை.  அதனால், அவர்களுக்கு இழப்பீடும் வழங்க முடியாது" என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம்
Tags:    

Similar News