செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஒமிக்ரான் பரவாமல் தடுக்க வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

Update: 2021-11-30 09:09 GMT
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒமிக்ரான் தடுப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் இன்னும் தடை விதிக்கவில்லை. இதில் ஏன் தாமதமாக செயல்பட வேண்டும்?சர்வதேச விமானங்களை முதலிலேயே கட்டுப்படுத்த தவறியதால் தான் இந்தியாவில் முதல் மற்றும் 2-வது அலை பாதிப்பு மோசமாக இருந்தது. பெரும்பாலான சர்வதேச நாடுகளில் விமானங்கள் டெல்லிக்கே வருவதால் டெல்லியில் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.

பிரதமர் தயவு செய்து உடனடியாக சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒமிக்ரான் தடுப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Tags:    

Similar News