செய்திகள்
ஒமிக்ரான் வைரஸ்

இந்தியாவில் ஒமிக்ரான் ஏற்கனவே பரவி இருக்கலாம்- தொற்று நோய் நிபுணர் கணிப்பு

Published On 2021-11-30 08:47 GMT   |   Update On 2021-11-30 12:10 GMT
நவம்பர் 9-ந் தேதி தான் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பரவியது கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் பெங்களூருவில் மட்டும் ஒருவருக்கு அறிகுறி தென்படுகிறது.

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோய் துறை தலைவர் சாமிரன் பாண்டா கூறியதாவது:-

இந்தியாவில் ஏற்கனவே ஒமிக்ரான் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 9-ந் தேதி தான் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

அங்கிருந்து வந்த பயணிகள் மூலம் ஒமிக்ரான் இந்தியாவில் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தும் போதுதான் இது தெரிய வரும்.

இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. யாருக்காவது இதன் தொற்று ஏற்பட்டு இருந்தால் கண்டுபிடிக்கப்பட்டு விடும்.

அதே நேரத்தில் எல்லா வகையிலும் நாம் தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டு விட்டோமே, நமக்கு எந்த பாதிப்பும் வராது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

சுகாதாரமாக இருப்பது, கைகளை சுத்தப்படுத்துவது, முககவசம் அணிவது, கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News