செய்திகள்
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய ஷிவாங்கி.

திருமண நாளன்று செமஸ்டர் தேர்வு: மணக்கோலத்தில் தேர்வு எழுதிய பெண்

Published On 2021-11-25 01:58 GMT   |   Update On 2021-11-25 01:58 GMT
திருமணமும், தேர்வும் ஒரேநாளில் வந்ததால் மணக்கோலத்தில் வந்து பெண் தேர்வு எழுதினார். மணமகளுக்காக தேர்வு மையத்தில் மணமகன் காத்திருந்தார்.
ராஜ்கோட் :

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தாரியா. இவர் ராஜ்கோட்டில் உள்ள சாந்தி நிகிதன் கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வந்தார். இதற்கிடையில், ஷிவாங்கிக்கும், பார்த் படாலியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவருக்கும் திருமணம் நடத்த இருதரப்பு பெற்றோரும் சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுத்தனர். ஆனால், இதே நாளில் ஷிவாங்கி பயின்று வரும் இளநிலை சமூகப்பணி பட்டபடிப்பின் செமஸ்டர் தேர்வு வந்தது. திருமணமும், செமஸ்டர் தேர்வும் ஒரே நாளில் வந்ததால் ஷிவாங்கி மிகவும் குழப்பம் அடைந்தார்.

இதுகுறித்து இரு குடும்பத்தினரும் ஷிவாங்கி தனது நிலைமையை எடுத்து கூறினார். மேலும், செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும் என்ற முடிவில் ஷிவாங்கி உறுதியாக இருந்தார். இது குறித்து தனது வருங்கால கணவரிடமும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து செமஸ்டர் தேர்வு எழுதிய பின்னர், சில மணி நேரம் கழித்து திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து ஷிவாங்கி தனது செமஸ்டர் தேர்வை எழுத மணப்பெண் கோலத்தில் தேர்வு மையத்துக்கு சென்றார். அவர் மணக்கோலத்தில் தேர்வு அறைக்கு வந்ததை தேர்வு எழுத வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மணமகன் பார்த் படாலியா மணக்கோலத்தில் தேர்வு மையத்துக்கு வந்திருந்தார். ஷிவாங்கி தேர்வு எழுதும் வரை பார்த் படாலியா தேர்வு மையத்திலேயே காத்திருந்தார். தேர்வுக்கு பின்னர் ஷிவாங்கிக்கும், பார்த் படாலியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
Tags:    

Similar News