செய்திகள்
பிரதமர் மோடி

நொய்டா சர்வதேச விமான நிலையம் - பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2021-11-23 23:19 GMT   |   Update On 2021-11-23 23:19 GMT
நொய்டாவில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மூலம் உத்தர பிரதேச மாநிலம் ஐந்து சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் ஜீவார் நகரில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. 

இதுதொடர்பாக, அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 2024-ம் ஆண்டில் இந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும். உ.பி.யில் 5-வது சர்வதேச விமான நிலையமாக இது இருக்கும். ரூ.34 ஆயிரம் கோடியில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 1 மணிக்கு நொய்டாவில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஏற்கனவே, குஷிநகர் சர்வதேச விமான நிலையம் மற்றும் அயோத்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News