செய்திகள்
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார் அசோக் கெலாட்

Published On 2021-11-16 17:46 GMT   |   Update On 2021-11-16 17:46 GMT
மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை ரூ.10 என்ற அளவிலும் குறைத்தது. இதனால் இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.

கலால் வரியைக் குறைத்த மத்திய அரசு, மக்கள் மேலும் பயனடையும் வகையில் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி, பாஜக ஆளும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தன.

இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ 4-ம், டீசல் மீதான வாட் வரியில் ரூ.5-ம் குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என அம்மாநில முதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News