செய்திகள்
அமித் ஷா

இந்தியாவின் ஒற்றுமையை யாராலும் அழிக்க முடியாது என்ற செய்தியை உலகுக்கு எடுத்துரைத்தவர் சர்தார்: அமித் ஷா புகழாரம்

Published On 2021-10-31 11:29 GMT   |   Update On 2021-10-31 11:29 GMT
சுதந்திரத்திற்குப் பிறகு, அவரது பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையோ, பாரத ரத்னா விருதோ வழங்கப்படவில்லை, தற்போது அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது என அமித் ஷா பேசினார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக குஜராத்தில் உள்ள கெவாடியா பகுதியில் தேசிய ஒற்றுமை சிலை அருகே இன்று பிரம்மாண்ட விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தலைமைத் தாங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பின்பு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய ஒற்றுமை தினத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. சுதந்திரத்திற்கு பிறகு, ஆங்கிலேயர்கள் வெளியேறும்போது நாட்டை பல துண்டுகளாகப் பிரிக்க சதி செய்தனர். சர்தார் வல்லபாய் பட்டேல் அந்த சதியை முறியடித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 182 அடி உயர சிலை அமைந்துள்ள கெவடியா ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல, அது  தேச ஒற்றுமை, தேச பக்தியின் கோவிலாக மாறிவிட்டது. வானளாவிய சர்தார் வல்லபாய்பட்டேலின் சிலை, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை யாராலும் அழிக்க முடியாது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, சர்தார் வல்லபாய் பட்டேலை மறக்க முயற்சி செய்யப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, அவரது பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையோ, பாரத ரத்னா விருதோ வழங்கப்படவில்லை.

ஆனால், தற்போது நிலைமை மாறியது. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. நாம் காண இந்த உலகின் மிக உயரமான சிலை  நம் கண்முன்னே இருக்கிறது.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.
Tags:    

Similar News