செய்திகள்
பெட்ரோல் விலை உயர்வு

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.121-ஐ கடந்ததால் அதிர்ச்சி

Published On 2021-10-31 04:30 GMT   |   Update On 2021-10-31 04:30 GMT
சத்தீஸ்கார் எல்லையோர மாவட்டமான அனுப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.121.13-க்கு விற்கப்பட்டது.
போபால்:

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்திருக்கும் நிலையில், இன்னும் அதன் ஏற்றம் நிற்கவில்லை.

இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.121-ஐ கடந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சத்தீஸ்கார் எல்லையோர மாவட்டமான அனுப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.121.13-க்கு விற்கப்பட்டது. இதைப்போல டீசல் விலை ரூ.110.29 ஆக இருந்தது.

மத்திய பிரதேசத்தின் மற்றொரு மாவட்டமான பாலாகாட்டிலும் பெட்ரோல் விலை ரூ.120.06 ஆகவும், டீசல் விலை ரூ.109.32 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேநேரம் தலைநகர் போபாலில் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.117.71, ரூ.107.13 ஆக இருந்தது.

இவ்வாறு நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
Tags:    

Similar News