செய்திகள்
ஆர்யன் கான்

கைது முதல் ஜாமீன் வரை... ஆர்யன் கான் வழக்கு கடந்து வந்த பாதை

Published On 2021-10-28 13:49 GMT   |   Update On 2021-10-28 14:03 GMT
ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
மும்பை:

மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

அக்டோபர் 2: ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

அக்டோபர் 3: ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை அக்டோபர் 4ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அக்டோபர் 4: ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 7ம் தேதிவரை என்சிபி காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 5 பேரையும் என்சிபி காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அக்டோபர் 5:  மேலும் 4 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அக்டோபர் 11ம் தேதி வரை என்சிபி காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

அக்டோபர் 6: சொகுசு கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் அக்டோபர் 14ம் தேதி வரை என்சிபி காவல் வழங்கப்பட்டது.

அக்டோபர் 7: ஆர்யன் கான், மெர்சச்ன்ட், தமேச்சா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக் காவலை நீட்டிக்க வேண்டும் என என்சிபி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஆர்யன் கான் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலனை செய்த மாஜிஸ்திரேட், ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து பதிலளிக்க என்சிபிக்கு கால அவகாசம் அளித்து வழக்கை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

அக்டோபர் 8: ஆர்யன் கான், மெர்ச்சன்டுடன் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு அனுப்பப்பட்டார். மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு எடுத்தது மாஜிஸ்திரேட் நீதிமன்றம். சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு, ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன்பின்னர் ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோர் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அக்டோபர் 11: சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணை. என்சிபி பதில் மனு தாக்கல்  செய்ய கூடுதல் அவகாசம் கேட்டது. விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அக்டோபர் 13: ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது சிறப்பு நீதிபதி வி.வி. பாட்டீல் விசாரணையை தொடங்கினார்.



அக்டோபர் 20: ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. ஆர்யன் கான், தமேச்சா இருவரும் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல்.

அக்டோபர் 21: ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி சாம்ப்ரேவிடம் முறையிடப்பட்டது. விசாரணை அக்டோபர் 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

அக்டோபர் 26: மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது. மெர்ச்சன்ட் தரப்பிலும் ஜாமீன் மனு தாக்கல்.

அக்டோபர் 27: ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோரின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை நிறைவு செய்தனர்.

அக்டோபர் 28: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
Tags:    

Similar News