செய்திகள்
ஆர்யன் கான்

போதைப் பொருள் வழக்கு- ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்

Published On 2021-10-28 11:27 GMT   |   Update On 2021-10-28 11:40 GMT
ஆர்யன் கானின் ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மும்பை:

சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  இதேபோல் அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

ஆர்யன் கான் சார்பில் முகுல் ரோகத்கி, முன்முன் தமேச்சா சார்பில் அலி காஷிப் கான் தேஷ்முக், அர்பாஸ் மெர்ச்சன்ட் சார்பில் அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர்.

மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஆர்யன் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News