செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- புதிதாக 16,156 பேருக்கு தொற்று

Published On 2021-10-28 04:40 GMT   |   Update On 2021-10-28 05:11 GMT
நாடு முழுவதும் நேற்று 49,09,254 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 104 கோடியே 4 லட்சத்தை கடந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 16,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

கேரளாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் 9,445 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

மகாராஷ்டிராவில் 1,485, தமிழ்நாட்டில்1,075, மேற்கு வங்கத்தில் 976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 500-ஐ தாண்டியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 31 ஆயிரத்து 809-ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 733 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 622 பேர் அடங்குவர். மொத்த பலி எண்ணிக்கை 4,56,386-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,098 பேர் அடங்குவர்.

தினசரி பாதிப்பை விட கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று 17,095 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 14ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,60,989 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



நாடு முழுவதும் நேற்று 49,09,254 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 104 கோடியே 4 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 12,90,900 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பரிசோதனை எண்ணிக்கை 60.44 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News