செய்திகள்
நடிகை அனன்யா பாண்டே

ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு - நடிகை அனன்யாவிடம் மீண்டும் விசாரணை

Update: 2021-10-25 07:21 GMT
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை அனன்யா பாண்டேவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2 தடவை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள்.

மும்பை:

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சொகுசுகப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி அவரை மும்பையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

ஆர்யன்கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் என்று அவரது செல்போன் மூலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆர்யன்கானுக்கும், நடிகை அனன்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து நடிகை அனன்யா பாண்டேவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2 தடவை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். போதைப்பொருள் விவகாரத்திற்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று நடிகை அனன்யா மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை அனன்யாவிற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதன் அடிப்படையில் இன்று நடிகை அனன்யாவிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது. முதன் முறை 2 மணி நேரமும், 2-வது தடவை 4 மணி நேரமும் நடிகை அனன்யாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படடு இருப்பதால் நடிகை அனன்யா மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்...உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை - பிரியங்கா காந்தி

Tags:    

Similar News