செய்திகள்
பிரியங்கா காந்தி

மக்களுக்கு சிக்கலை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்து வருகிறது: பிரியங்கா காந்தி காட்டம்

Published On 2021-10-24 09:07 GMT   |   Update On 2021-10-24 09:07 GMT
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து ஜெட் வேகத்தில் சென்று  கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களில் விலைவாசிகள் உயர்ந்துள்ளன.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை ரூ. 23.53 உயர்ந்துள்ளது’ என்ற ஒரு ஊடகத்தின் அறிக்கையை டேக் செய்து, "பொது மக்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகளை அளிப்பதில் மோடி அரசு பெரிய சாதனைகளை படைத்துள்ளது. மோடி அரசாங்கத்தில் அதிக வேலையின்மை, மோடி அரசாங்கத்தில் அரசு சொத்துகள் விற்கப்படுகின்றன, மோடி அரசாங்கத்தில் ஒரு ஆண்டில் அதிகளவில் பெட்ரோல் விலை உயர்வு" என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News