செய்திகள்
யாத்திரையை தொடங்கி வைத்த பிரியங்கா காந்தி

பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன், பட்டதாரி பெண்களுக்கு ஸ்கூட்டி - பிரியங்கா காந்தி அதிரடி

Published On 2021-10-23 19:17 GMT   |   Update On 2021-10-23 19:17 GMT
உத்தர பிரதேச மாநில விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கனி பறிக்க காங்கிரஸ் கட்சி அதிரடி உத்திகளை வகுத்து வருகிறது.

இதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி அங்கு முகாமிட்டு, களப்பணி ஆற்றி  வருகிறார். வாக்காளர்களைக் கவரும் விதத்தில் அவரும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வாக்காளர்களை சென்று சந்திக்கும் வாக்குறுதி யாத்திரையை லக்னோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பாரபங்கியில் பிரியங்கா காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி 7 வாக்குறுதிகளை அளிக்கிறோம்.

தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் டிக்கெட்

விவசாய கடன்கள் தள்ளுபடி

இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு

நெல், கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,500, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.400 உயர்வு

கொரோனா பாதித்த ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி

மின்கட்டணம் பாதியாக குறைப்பு

பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன், பட்டதாரி பெண்களுக்கு ஸ்கூட்டி

சட்டசபை தேர்தலில் பெண்களுக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ.72 ஆயிரம் கோடி விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தோம். இது அவர்களுக்கு பெரிதும் உதவியது. அரசு துறைகளில் நிறைய இளைஞர்களை சந்தித்தேன். அவர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News