செய்திகள்
மாணவர்கள்

சீருடை, புத்தகம், பை வாங்க பெற்றோர்கள் வங்கி கணக்கில் பணம்: உ.பி. அரசு முடிவு

Published On 2021-10-23 06:02 GMT   |   Update On 2021-10-23 06:02 GMT
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், பை உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த உத்தரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பள்ளி சீருடை, புத்தகம், பை, காலணிகள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இந்த பொருட்களை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக, பெற்றோர்களுக்கு பணமாக அனுப்ப உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.   

இதுதொடர்பாக உ.பி., மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், " அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சீருடை, புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தை மேம்படுத்தப்படுகிறது. அதன்படி, இனி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், பை, காலணி, காலுரை, ஸ்வெட்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்க, பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் பணமாக அனுப்பப்படும். இதன் மூலம் 1.6 கோடி மாணவர்களின் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News