செய்திகள்
தேர்வு

கேரளாவில் பிளஸ்-1 நேரடி தேர்வு 27-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-10-23 05:34 GMT   |   Update On 2021-10-23 06:19 GMT
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிளஸ்-1 நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என கேரள கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 9361 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 99 பேர் மரணம் அடைந்தனர்.



இந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பிளஸ்-1 நேரடி தேர்வு கடந்த 18-ந்தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட படி நடத்தப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்ட அந்த தேர்வு வருகிற 27-ந்தேதி முதல் மீண்டும் நடைபெறும் என கேரள கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என கேரள கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News