செய்திகள்
டெல்லி செங்கோட்டை மூவர்ண ஒளியில் ஜொலிக்கும் காட்சி

100 கோடி தடுப்பூசி சாதனையையொட்டி மூவர்ணத்தில் ஒளிரும் பாரம்பரிய சின்னங்கள்

Published On 2021-10-22 04:10 GMT   |   Update On 2021-10-22 04:10 GMT
டெல்லி செங்கோட்டை, குதுப் மினார், பதேபுர் சிக்ரி, ஹம்பி, கஜுராகோ கோவில் உள்பட 100 பாரம்பரிய சின்னங்களில் தேசிய கொடி நிறத்தில் விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில், 100 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தி நேற்று சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதையொட்டி, இந்திய தொல்லியல் துறை, தனது பராமரிப்பில் உள்ள 100 பாரம்பரிய சின்னங்களை இந்திய தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது.



யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட டெல்லி செங்கோட்டை, குதுப் மினார், பதேபுர் சிக்ரி, ஹம்பி, கஜுராகோ கோவில், ஐதராபாத் கோல்கொண்டா கோட்டை உள்பட 100 பாரம்பரிய சின்னங்களில் தேசிய கொடி நிறத்தில் விளக்கு அலங்காரம் செய்யப்படும்.

இது, 100 கோடி தடுப்பூசி சாதனைக்கு காரணமான சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு அளிக்கும் மரியாதை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags:    

Similar News