செய்திகள்
பிரதமர் மோடி

100 கோடி டோஸ் தடுப்பூசி மக்களின் கூட்டு முயற்சியில் இந்தியா படைத்த வரலாற்று சாதனை- பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2021-10-21 09:08 GMT   |   Update On 2021-10-21 09:41 GMT
டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் சாதனைக்கு உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் இன்று அதன் எண்ணிக்கை 100 கோடி டோசை எட்டியது.

இது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 100 கோடியை இன்று பகலில் எட்டியதும், பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளியிட்டார். இது சம்பந்தமாக டுவிட்டரில் அவர் ஒரு செய்தி வெளியிட்டார்.

இந்தியா இன்று மிகப்பெரிய வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. மிகப்பெரிய வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.



இந்திய விஞ்ஞானிகள், நிறுவனங்கள் மேலும் 130 கோடி மக்களின் கூட்டு முயற்சிக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. 100 கோடி தடுப்பூசி போடும்பணியை வெற்றிகரமாக முடித்ததற்காக நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இந்த சாதனைக்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

100 கோடி தடுப்பூசி போடப்பட்ட தகவல் வந்ததும், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருடன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மான்டவியாவும் சென்றார்.

அங்கு நடந்த 100 கோடி தடுப்பூசி வெற்றி விழாவில் பிரதமர் பங்கேற்றார். அப்போது டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக அவர் கலந்துரையாடினார்.


Tags:    

Similar News