செய்திகள்
கோப்புப்படம்

பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பா?- சி.பி.எஸ்.இ. விளக்கம்

Published On 2021-10-18 12:41 GMT   |   Update On 2021-10-18 12:41 GMT
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதியை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021-2022-ம் கல்வியாண்டுக்கான பள்ளி வகுப்புகளை சரியான நேரத்தில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுத்தேர்வுகள் நடைபெறும் மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்தது. முதல் பகுதி தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், 2-வது பகுதி தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப பாடங்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல் பகுதி பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதாக செய்தி வெளியானது. நவம்பர் மாதம் தேர்வு நடைபெற இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

அந்த செய்திகள் உண்மையானது அல்ல என சி.பி.எஸ்.இ, தற்போது விளக்கம் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ. கொடுத்துள்ள விளக்கத்தில் ‘‘சமூக வலைத்தளங்களில் போலியான தேர்வு அட்டவணை பரப்பப்பட்டு வருகிறது. இது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள்- மாணவிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். தற்போது வரை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் எந்தவிதமான தேர்வு அட்டவணையையும் வெளியிடவில்லை’’ எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News