செய்திகள்
பா.ஜனதா தேசிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜனதா தேசிய நிர்வாக குழு கூட்டம்

Published On 2021-10-18 08:38 GMT   |   Update On 2021-10-18 08:38 GMT
மேற்கு வங்காளம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைவது குறித்து தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுடெல்லி:

பா.ஜனதா கட்சியின் தேசிய நிர்வாககுழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று காலை தொடங்கியது. பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மேற்கு வங்காளம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News